டூ வீலர் - கார் நேருக்கு நேர் மோதல். முதியவர் படுகாயம்.

73பார்த்தது
காந்திகிராமம்- டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதல். முதியவர் படுகாயம்.

கரூர் மாவட்டம், தெற்கு காந்திகிராமம் , மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நகுல்சாமி வயது 61.


இவர் மே 31ஆம் தேதி காலை 10 மணி அளவில் , கரூர் - திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் காந்திகிராமம் பகுதியில் செயல்படும் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது ,



எதிர் திசையில் கரூர் மாவட்டம் , புகலூர் தாலுகா , புன்னம் சத்திரம் பகுதியை சேர்ந்த ரத்தினம் வயது 60 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் , நகுல்சாமி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் வாகனத்துடன் கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டது நகல்சாமிக்கு.

உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் அறிந்த நகுல் சாமியின் மனைவி அம்சவல்லி வயது 60 என்பவர் அளித்த புகாரின் பேரில் , சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , காரை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ரத்தினம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்
தாந்தோணி மலை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி