பேருந்தை திடீரென இடதுபுறம் திருப்பியதால் டூவீலர்மோதிவிபத்து

75பார்த்தது
கரூர் சேலம் சாலையில் வேகமாக சென்ற பள்ளி பேருந்து திடீரென இடதுபுறம் திருப்பியதால் டூ வீலர் மோதி விபத்து.

கரூர் மாவட்டம் வெங்கமேடு புது புளியமர தெரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது 37 இவரது நண்பர் இன்தியாசம்.

இவர்கள் இருவரும் மார்ச் 17ல் காலை 8: 15 மணியளவில், கரூர்-சேலம் சாலையில் அவர்களது டூவீலரில் சென்றனர். டூவீலரை இன்தியாசம் ஓட்டி சென்றார். இவர்களது வாகனம் கொங்கு ஆர்ச் அருகே வந்தபோது,


கரூர் வேலுச்சாமிபுரம், பஸ்ட் கிராஸ் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் வயது 43 என்பவர் வேகமாக ஓட்டி வந்த பள்ளி பேருந்து,


இன்தியாசம் ஓட்டி சென்ற டூவீலருக்கு முன்னால் சென்று, திடீரென எவ்வித சிக்னாலும் காட்டாமல் இடது புறம் பேருந்தை திருப்பியதால், டூவீலர் பேருந்தின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த கார்த்திகேயனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், பள்ளி பேருந்தை வாகன விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓட்டாமல், விபத்து ஏற்படும் வகையில் ஒட்டிய பள்ளி பேருந்து ஓட்டுநர் சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி