வெங்கக்கல்பட்டியில் கஞ்சாவை பதுக்கி வைத்த கல்லூரி மாணவன் உள்ளிட்ட இரண்டு பேர் கைது.
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கக்கல்பட்டி பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் தில்லை கரசிக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் ஜனவரி 8-ம் தேதி மதியம் 12 மணி அளவில் வெங்கக்கல்பட்டி பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது கரூர், தாந்தோணி மலை அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயிலும் ரூபன் வயது 19 என்பவரும், தாந்தோணிமலை கணபதிபாளையம் வசந்தம் நகரை சேர்ந்த ஜெயக்குமார் வயது 19 ஆகிய இருவரையும் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் விற்பனை செய்வதற்காக ரூபாய் 800 மதிப்புள்ள 80 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
எனவே, கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். தாந்தோணி மலை காவல்துறையினர்.