இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடிகொடுத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக , கரூர் - திருச்சி சாலையில் காந்திகிராமம் அருகே, பாரதிய ஜனதா கட்சியின்
கரூர் தாந்தோணி வடக்கு மண்டல பொறுப்பாளர் ஸ்ரீமதி சிந்தியா நடேசன் தலைமையில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில் கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் காவேரி மோகன்ராஜ் , கரூர் மத்திய மாநகர மண்டல தலைவர் சரண்ராஜ் , கரூர் மேற்கு மாநகரம் மண்டல தலைவர் பவானி துரை பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மூவர்ண கொடியை கையில் பிடித்து ராணுவ வீரர்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்து கோஷங்களை எழுப்பியவாறு நரிக்கட்டியூர் வரை சென்று பொதுமக்கள் இடையே எழுச்சியை ஏற்படுத்தினர்.