ஜனவரி 13ல் திருச்சி- பாலக்காடு ரயில் ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும்- PRO.
கரூர் மாவட்டம், உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் ஜனவரி 13ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் இருந்து கரூர் வழியாக பாலக்காடு செல்லும் ரயில் எண் 16843 ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும்.
ஈரோடு அருகே ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அன்றைய தினம் மதியம் ஒரு மணிக்கு ஈரோட்டில் நிறுத்தப்படும்.
அதேசமயம் ஈரோட்டில் இருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ரயில் இயக்கப்படும். ரயில் எண் 16843 இல் உள்ள அதே ரயில்வே நிறுத்தங்கள், இயக்கப்படும் சிறப்பு ரயிலிலும் இருக்கும் இன சேலம் கோட்ட ரயில்வே செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.