கரூரில், கார்கில் போரில் வீர மரணம் தழுவிய வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய அரிமா சங்கத்தினர்.
கார்கில் போரில் வீர மரணம் தழுவிய வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி, கரூர் ஜவஹர் பஜார் பகுதியில், அமைக்கப்பட்டுள்ள தமிழ் புலவர்கள் பன்னிருவர் சிலை முன்பு, கரூர் அரிமா சங்கம் சார்பில், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை. பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தன்னார்வலர்கள், முன்னாள் அரிமா சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, 1999 ஆம் ஆண்டு நமது இந்திய எல்லை கட்டுப்பாட்டுக்கோட்டை தாண்டி பாகிஸ்தானிய ராணுவமும், காஷ்மீரிய கிளர்ச்சியாளர்களும் இந்தியாவுக்குள் அத்துமீறியதை எதிர்த்து, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் "ஆபரேஷன் விஜய்" என்ற திட்டத்தில் கார்கில் போர் நடைபெற்று இந்தியா வெற்றி பெற்றது.
இந்த போரில் இந்திய வீரர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வீர மரணம் எய்தினர்.
தன் உயிரைக் கொடுத்து, இந்தியாவின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய அந்த வீரர்களின் செயல் வீரத்தை போற்றும் வகையில் அனைவரும் வீரவணக்கம் செலுத்தினர்.
பின்னர் ஜவகர் பஜார் வழியாக ஊர்வலமாக சென்று, பொதுமக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தினர்.