கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆண்டா கோயில் மேற்கு ஊராட்சி கோவிந்தம்பாளையம் பகுதியில் சுதந்திர தின விழா கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் K. M. பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், புகையிலை பொருட்கள் இல்லாத கிராமமாக ஆண்டாங்கோயில் மேற்கு கிராமம் உருவாக, பொதுமக்களுக்கு விளைவுகள் குறித்து எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு பகுதிகளிலும் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது குறித்தும் பொதுமக்கள் புகையிலை ஒரு கல் பயன்படுத்தாமல் தவிர்ப்பது குறித்தும், சுகாதார ஆய்வாளர் சிவகுமார் எடுத்துரைத்தார்.
இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.