கரூரில், உயர்த்திய மின் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட தலைவர் திருமூர்த்தி தலைமையில் வந்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்பு, பல்வேறு வரிகளை உயர்த்தி வருகிறது.
குறிப்பாக பால் கட்டணம் , சொத்து வரி, பத்திரப்பதிவு, குடிநீர் கட்டணம், குப்பைக்கு தனியாக வரி விதித்த தமிழக அரசு, மின் கட்டண உயர்வை ஏற்படுத்தியதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர்.
மேலும், மீண்டும் தற்போது மின் கட்டண உயர்வால் ஏழை, எளிய நடுத்தர மக்கள், சிறு, குறு வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் வைத்துள்ளவர்கள், வணிகர்கள், விசைத்தறி நூற்பாளர்கள் என பலதரப்பட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், உடனடியாக உயர்த்தி மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், கரூர் நகர தலைவர் ஜெகநாதன், சிங்காரம், ராமசாமி, சக்திவேல், பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.