இளையராஜா நேரடி இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் வெளியீட்டு விழா.

78பார்த்தது
கரூரில் இசைஞானி இளையராஜா நேரடி இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் வெளியீட்டு விழா.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் நேற்று இரவு ராஜாவின் இசை ராஜாங்கம் என்ற தலைப்பில் இசைஞானி இளையராஜா அவர்களின் நேரடி இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதற்காக நடைபெற்ற விழாவில் அமைக்கப்பட்ட மேடையில் இசைக் கலைஞர்கள் இளையராஜாவின் பாடல்களை இசைத்து அனைவரையும் கவர்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கரூரில் உள்ள முக்கிய தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்கள், சமூக ஆர்வலர்கள், சமூகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டிக்கெட் வெளியீட்டு விழாவுக்கான நிகழ்ச்சியில் குழந்தைகள், கற்றறிந்தோர் என அனைவரும் ஒன்று சேர்ந்து திருவாசகம் பாடலை பாடி பிறகு இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை வெளியிட்டனர்.

அப்போது அனைவரும் இளையராஜாவின் முகமூடியை அணிந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கரூரில் வரும் மே ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இசை நிகழ்ச்சியை கண்டுகளிக்க ஒரு நபருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 500 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் நிர்ணயம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி