பசுபதிபாளையத்தில் பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது.
பசுபதிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் அழகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில், டிசம்பர் 22ஆம் தேதி மாலை 5: 30- மணி அளவில், பசுபதிபாளையம் பகுதியில் செயல்படும் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள முள் தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டறியப்பட்டது.
சூதாட்டத்தில் ஈடுபட்ட பசுபதிபாளையம் அருணாச்சலம் நகர் 2வது கிராசை சேர்ந்த விஜய், கார்த்திக், விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
பின்னர், அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 150 யும் பறிமுதல் செய்தனர்.
மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.