பணம் வைத்து சூதாடிய மூவர் கைது. ரூபாய் 250 பறிமுதல்.

82பார்த்தது
பஞ்சமாதேவியில், பணம் வைத்து சூதாடிய மூவர் கைது. ரூபாய் 250 பறிமுதல்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சமாதேவி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் ஆர்த்திக்கு தகவல் கிடைத்தது.


தகவலின் அடிப்படையில் பிப்ரவரி 14-ஆம் தேதி மாலை 4 மணியளவில், பஞ்சமாதேவி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.


அப்போது அப்பகுதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள முள் தோட்டத்தில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது.

இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட பஞ்சமாதேவி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த மாயவன், ராஜேஷ், குடி தெருவை சேர்ந்த சேகர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, பணம் வைத்து சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூபாய் 250யும் பறிமுதல் செய்தனர்.


மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிறகு அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி