கரூர்: சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது

51பார்த்தது
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அரசகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைத்த அலுவலர் குழுவை திரும்ப பெற வேண்டும். 

ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தியது போல அமல்படுத்த வேண்டும். பிற மாநிலங்களில் சிபிஎஸ் திட்ட ஊழியர்களுக்கு வழங்குவது போல பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முனைந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து காவல் வாகனத்தில் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி