தாந்தோணி ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை. ஏராளமான பெண்கள் பங்கேற்பு.
கரூர் மாவட்டம், தாந்தோன்றி மலை ஸ்ரீ ஊரணி காளியம்மன் ஆலயத்தில்,
ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் அறக்கட்டளை மற்றும் ஐயப்பன் பக்தர்கள் இணைந்து நடத்தும் 4-ம் ஆண்டு குத்து விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தாந்தோணிமலை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர்.
இக்கோவிலில் நவம்பர் 26ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. நாளை சக்தி கன்னிகளுக்கு அருள் அழைத்து நெய் விளக்கு ஏந்துதல் நிகழ்ச்சியும், நாளை மதியம் அன்னதான நிகழ்ச்சியும், மாலை கோவில் வளாகத்தில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இன்று நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் தங்களது குடும்பம் செழித்தோங்கவும், மழை பொழிந்து பூமி வளம் பெறவும், விளைச்சல் பெருகவும், நாட்டு மக்கள் அனைவரும் பொருளாதார ஏற்றம் பெறவும், குடும்பத்தினர் அனைவரும் ஆரோக்கியமாக வாழவும் வேண்டி பூஜையில் ஈடுபட்டனர்.
பூஜையின் போது சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி திருவிளக்கு பூஜையை வெகு சிறப்பாக நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியை ஊரணி காளியம்மன் ஸ்ரீ ஐயப்பன் சேவா சங்கம் அறக்கட்டளை,
ஸ்ரீ ஐயப்பன்
குருசாமிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை விமர்சையாக நடத்தினர்.