மாவட்ட மைய நூலகத்தில் அய்யன் திருவள்ளுவர் திருஉருவச் சிலை வெள்ளி விழா கருத்தரங்கம் நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவட்ட மைய நூலகத்தில், அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கருத்தரங்கம் மாவட்ட மைய நூலக அலுவலர் சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வாசகர் வட்ட தலைவர் உமா சங்கர், வள்ளுவர் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி தாளாளர் செங்குட்டுவன், மாவட்ட மைய நூலகத்தின் நெறியாளர், வாசக வட்டத்தின் பெரும் புரவலர் ஈஸ்வரமூர்த்தி, இனாம் கரூர் கிளை நூலகர் மோகனசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில்,
" நான் ரசித்த வள்ளுவம்" என்ற தலைப்பில் பரணி பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியம் மற்றும் ஸ்காட்லாந்து நாட்டின் வாட் பல்கலைக்கழக இணை பேராசிரியர் சுதாகர் பிச்சை முத்து ஆகியோர் கலந்து கொண்டு வாழ்வியல் நாயகன் வள்ளுவரின் சிறப்புகளை எடுத்து கூறி, வள்ளுவரின் நெறிகள் கரூர் மக்களை எந்த அளவுக்கு ஈர்த்துள்ளது என்பதையும், வாழ்வியலோடு கலந்த நெறிகளையும், வகைப்படுத்தி எடுத்துரைத்தனர்.