திருமாநிலையூர்-ஜெர்கின் கோட் ரூ. 200. அள்ளி சென்ற பொதுமக்கள்.

67பார்த்தது
திருமாநிலையூரில் ஜெர்கின் கோட் ரூ. 200. அள்ளிச் சென்ற பொதுமக்கள்.

கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகள தொடர்ந்து நாள்தோறும் மழை பெய்து வருகிறது.

மேலும் நான்கு ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என தமிழக வானிலை மையம் அறிவித்துள்ளது.

கரூரில் தற்போது பெய்யும் மழை அனைத்தும் கனமழையாக பெய்து வருகிறது.

மழை நேரத்தில் வெளியில் செல்ல முடியாத நிலை பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.

கோவையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஜெர்கின் கோட் விற்பனை நிறுவனம் மும்பை , டெல்லி, பெங்களூர் நகரங்களிலிருந்து ரெயின் கோட்டை தருவித்து, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று சில்லறை விற்பனை மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில் கரூர், திருமாநிலையூர் பகுதியில் ஜெர்கின் கோட் ஒன்றுக்கு 200 ரூபாய் என கூவி கூவி விற்பனை செய்ததால், பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ற எண்ணிக்கையில் ஜெர்கின் கோட்டுகளை வாங்கிச் சென்றனர்.

பரபரப்பாக நடைபெறும் இந்த விற்பனை இன்று ஒரு நாள் மட்டுமே என அறிவித்ததால், பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி