மானம், கற்பு, அடக்கம், ஒழுக்கம் போன்ற வரைமுறைகளை வைத்து பெண்களை அடக்கி ஆளுகிறார்கள் ஆண்கள்-கரூரில் ஆட்சியர் தங்கவேல் விளக்கம்.
கரூர் காந்திகிராமத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பாலின உணர்வு & ஒழிப்பதற்காக மாவட்ட அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் புகழேந்தி, ஜோதி ராமன், கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம், கரூர் எஸ். பி. பெரோஸ்கான் அப்துல்லா, கவிஞர் சுவேதா உள்ளிட்ட பல்வேறு பெண்கள் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கருத்துரை வழங்கிய கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், இந்த நவீன காலத்திலும் பெண்களை கற்பு, மானம், அடக்கம், ஒழுக்கம் போன்ற வரைமுறைகளை வைத்து பெண்களை ஆண்கள் ஒரு எல்லைக்குள் அடக்கி வைத்திருக்கிறார்கள் என தெரிவித்த அவர், அந்தக் கட்டத்தை சட்டத்தின் துணை கொண்டு உடைத்து எறிந்து வெளியே வரவேண்டும். அதற்காகவே இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதாக தெரிவித்தார். மேலும் இது போன்ற பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் எனவும், பெண்களுக்கான சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்காக தமிழகத்தில் பல வருடங்களாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.