கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்வு எஸ். பி தலைமையில் நடைபெற்றது

54பார்த்தது
கரூர் மாவட்ட காவல்துறை சார்பில்
கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி எஸ். பி. தலைமையில் நடைபெற்றது

கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களின் கல்லூரியில் பயிலும் மகன் மற்றும் மகளுக்கு தமிழக அரசால் வருடம்தோறும் நூற்றாண்டு கல்வி உதவித்தொகை தமிழ்நாடு காவலர் சேமநல நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 2023 - 2024ம் கல்வி ஆண்டிற்கான நூற்றாண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு 16- காவலர்களின் மகன் மற்றும் மகளுக்கு இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ். பி. பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நிதியை பெறும் ஒவ்வொருவரையும் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா நிதியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி