8மணி நேரத்தை கடந்தும் தொடரும் காத்திருப்பு போராட்டம்

62பார்த்தது
8மணி நேரத்தை கடந்தும் தொடரும் காத்திருப்பு போராட்டம்
கரூர் கோவை சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தொடர் காத்திருப்பு போராட்டம் கரூர் மின் வட்ட கிளை தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

காத்திருப்பு போராட்டத்தில், துணைச் செயலாளர் துரை வரவேற்புரை நிகழ்த்தினார்.

சி ஐ டி யு கரூர் மாவட்ட தலைவர் ஜி ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் சி. முருகேசன், நாமக்கல் மின்வட்ட கலைத் தலைவர் சௌந்தரராஜன், துணைச் செயலாளர் ஜெயக்குமார், துணைத் தலைவர் முருகன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர் தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களின் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில், இன்று காலை 10 மணிக்கு துவங்கி மாலை 6 மணி கடந்தும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி