கரூரில் பழைய வழிதடத்தில் புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
தமிழ்நாடு அரசு கும்பகோணம் கோட்டம் போக்குவரத்து கழகம் மண்டலம் 1&2 சார்பாக, அரவக்குறிச்சி, குளித்தலை கிளைகளில் பழைய பேருந்துகளுக்கு பதிலாக, புதியதாக பதிவு செய்த 7- நகரப் பேருந்துகளை இன்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், கரூர் மண்டலம் 1&2, அரவக்குறிச்சி, குளித்தலை கிளை மேலாளர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் சட்டமன்ற தொகுதியில், கரூர்- கரிக்காலி வழித்தடத்திலும், கரூர் - கோட்டை நத்தம் வழித்தடத்திலும் பேருந்துகள் இயக்கப்பட்டது.
இதே போல கிருஷ்ணராயபுரத்திற்கு கரூர் - மாணிக்காபுரம் வழித்தடத்திலும், அரவக்குறிச்சிக்கு கரூர் - கூனம்பட்டி, கரூர்- மூலனூர் வழிதடத்திலும், குளித்தலைக்கு, குளித்தலை - நெய்தலூர் காலனி குளித்தலை- மேலப்பட்டி, தோகைமலை வழித்தடத்திலும் புதிய பேருந்துகள் இயக்கப்படுகிறது.