மதுபானங்களை கடத்தி வந்தவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் , அழகர் நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் கண்ணன் வயது 38.
இவர் மே ஐந்தாம் தேதி பாண்டிச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக பாண்டிச்சேரி மதுபானங்களை கார் மூலம் கடத்தி வந்தார்.
இவரது வாகனம் கரூர் அடுத்த பழைய சுக்காலியூர் அருகே வந்தபோது, வாகன தணிக்கையில் அவர் மதுபானங்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.
உடனடியாக அவரை கைது செய்து கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறை அதிகாரிகள் சதீஷ் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து கடத்தி வந்த ரூ. 51, 900 மதிப்புள்ள 233 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சதீஷ் கண்ணனின் பின்னணியை ஆராய்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா மாவட்ட ஆட்சியருக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைத்தார்.
பரிந்துரை ஏற்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சதீஷ் கண்ணனை நேற்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.