கரூர்: எறிபத்த நாயனார் பூக்குடலை விழா

71பார்த்தது
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் மகாஅஷ்டமியை முன்னிட்டு, 64 நாயன்மார்களில் முக்கியமானவராக கருதப்படும் எறிபத்த நாயானர் பூக்குடலை விழா கோலாகலமாக நடந்தது. சோழர்கள் காலத்தில் நடந்த முக்கியமான வரலாற்று நிகழ்வை ஆண்டுதோறும் தத்ரூபமாக நடித்து பூக்குடலை திருவிழா நடத்தப்படுகிறது.

கோவிலில் எறிபத்த நாயனார், புகழ் சோழ நாயனார், சிவகாமி ஆண்டார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. சிவனுக்கு பூஜை செய்ய நந்தவனத்தில் பூ பறித்து கொண்டு சிவகாமி ஆண்டார் நடந்து வந்தபோது மதம் பிடித்து யானை பூக்குடலையை தட்டி விட்டது.

வேல்கம்புடன் அந்த யானையை சிவபக்தர்கள் துரத்தி வந்தபோது மழு எனும் ஆயுதத்தால் எறிபத்த நாயனார் யானையின் தும்பிக்கை வெட்டியவுடன் அது கீழே சாயும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு வந்த புகழ்சோழ மன்னர் தான் வைத்திருந்த வாளால் தன்னை வெட்டும்படி எறிபத்த நாயனாரிடம் கேட்டு கொண்டார்.

அப்போது பசு வாகனத்தில் அலங்கார வள்ளியுடன் காட்சிதந்த பசுபதீஸ்வரர் இறந்த யானையை உயிர்த்தெழச்செய்து, பூ மழை பொழிந்து ஆசீர்வாதம் செய்தார். அங்கிருந்த பக்தர்கள் தாங்கள் வைத்திருந்த பூக்களை தூவி வழிபட்டனர். பூக்குடலைகள் புடைசூழ, சிவகாமி ஆண்டார் முன்னே செல்ல, பசுபதீஸ்வரர், அலங்காரவள்ளி, புகழ் சோழ மன்னருடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி