புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம்-ஆட்சியர் துவக்கி வைத்தார்.

70பார்த்தது
கரூரில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவிகளின் கல்வி தடைப்படாமல் உயர் கல்வி சேர்க்கையை அதிகரிக்க, சமூக நலன் & மகளிர் உரிமைத்துறை மூலம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் 6-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ 1000- வழங்கும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.

இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் 2024-25-ம் கல்வி ஆண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-முதல் 12-ம் வகுப்பு வரை, தமிழ் வழி கல்வியில் பயின்று, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, அதன் துவக்க நிகழ்ச்சியாக சென்னையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்ற விரிவாக்க நிகழ்ச்சியில், கரூர் மாவட்டத்தில் தற்போது 37 கல்லூரிகளில் பயின்று வரும் 1258- மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி & கல்லூரியின் முதல்வர், சமூக நலத்துறை அதிகாரிகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி