மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி முன்னாள் அமைச்சர் துவக்கினார்.

78பார்த்தது
தமிழக முன்னாள் முதல்வர்கள் பிறந்தநாள். மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி முன்னாள் அமைச்சர் துவக்கி வைத்தார்.

கரூர் வெள்ளியணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தாந்தோணி கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தாந்தோணி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில், நடைபெற்ற கரூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியியை கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்துறை அமைச்சருமான எம். ஆர். விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார்.

இதில் மாணவ- மாணவிகள் 10 வயது, 13 வயது, 17 வயது உட்பட்ட பிரிவுகளிலும், ஆண்கள், பெண்கள் பொதுப் பிரிவு சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டியில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளை முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி