மாற்றுத்திறனாளிகள் இருக்கைக்கு சென்று மனுக்களைபெற்ற ஆட்சியர்

51பார்த்தது
மாற்றுத்திறனாளிகள் இருக்கைக்குச் சென்று மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்த கூட்டத்தில் தங்களது குறைகள் குறித்த மனுக்களை அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பது வழக்கம்.

இதில் மாற்று திறனாளிகள் வரிசையில் நின்று, மாவட்ட ஆட்சியரை சந்திப்பது சிரமமாக இருக்கும் என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு என தனியாக இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தான் மனுக்கள் அளிப்பார்கள்.

ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு அசவுகரியம் ஏற்படாமல் இருப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் நேரடியாக மாற்றுத்திறனாளிகள் இருக்கைக்குச் சென்று மனுக்கள் பெற்று வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்றும் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளின் இருக்கைக்கே சென்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்களது குறைகள் குறித்த மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி