அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் 6, 397 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
கரூர் மாவட்டத்தில், 67- அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 6, 397- மாணவ - மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூபாய் 3 கோடியே 8 லட்சத்து 29 ஆயிரத்து 680 மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை, மண்மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணப்பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டு நல அலுவலர் இளங்கோ, பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முதல் கட்டமாக இன்று 119 மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.