காளியப்பனூர் அருகே முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் இட்டதால் பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து.
கரூரை அடுத்த தாந்தோணி மலை அருகே காளியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் வயது 35.
இவர் நேற்று முன்தினம் மதியம் ஒரு மணி அளவில் கரூர் - பாளையம் சாலையில் அவரது டூவீலரில் சென்றார்.
இவரது வாகனம் காளியப்பனூர் பகுதியில் உள்ள தனியார் ஸ்டீல் கடை அருகே சென்றபோது ,
அதே சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்நத்ராம் வயது 22 என்பவர் வேகமாக ஓட்டிச் சென்ற கார் திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் , திடீரென பிரேக் கிட்டதால், பின்னால் சென்ற தங்கவேலுவின் டூவீலர் , கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தங்கவேலுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் , உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் அறிந்த தங்கவேலுவின் மனைவி சாந்தி பிரியா அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , இதுதொடர்பாக காரை சாலை விதிகளுக்கு புறம்பாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான வட மாநில இளைஞர் பக்னத்ராம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்
தாந்தோணி மலை காவல்துறையினர்.