சுக்காலியூர் ரவுண்டானாவில் லாரி திடீரென வலது புறம் திருப்பியதால் டூ வீலர் மோதி விபத்து. இருவர் படுகாயம்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு, எம் கே நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் வயது 40.
இவரது நண்பர் குமரப்ப கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் வயது 42.
இருவரும் மார்ச் 20ம் தேதி மதியம் 2: 45 மணி அளவில், திருச்சி - கரூர் சாலையில், அவர்களது டூவீலரில் சென்றனர். சுரேஷ் டூவீலரை ஓட்டி சென்றார்.
இவர்களது வாகனம் சுக்காலியூர் ரவுண்டானா அருகே சென்றபோது, இவர்களுக்கு முன்பாக சென்ற டிஎன் 01 ஏஏ 9438 என்ற எண் கொண்ட டாரஸ் லாரி, எவ்வித சிக்னாலும் வெளிப்படுத்தாமல் திடீரென வலது புறம் திருப்பிதால், பின்னால் சுரேஷ் ஓட்டி வந்த டூவீலர் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் டூவீலருடன் கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் குறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், இது தொடர்பாக சாலை விதிகளை மதிக்காமல் லாரியை ஓட்டி விபத்து ஏற்படுத்திய டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர் தாந்தோனிமலை காவல்துறையினர்.