கரூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக கரூர் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜனுக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் செப்டம்பர் 29ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், கரூர் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சேலம் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில், கரூர் மாவட்டம், ஆத்தூர் பிரிவு, சுந்தரம் நகரை சேர்ந்த தியாகராஜன் மகன் சமரான் வயது 31 என்பவர் 2- கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து, சமரானை கைது செய்தனர்.
பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.