சுக்காலியூர்-டூ வீலர்-கார் மோதி விபத்து. பெண், குழந்தை காயம்.

57பார்த்தது
சுக்காலியூர் அருகே டூ வீலர் கார் நேருக்கு நேர் மோதி விபத்து. பெண் மற்றும் குழந்தை படுகாயம்.

கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுகா, செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி வயது 38. இவரது மகள் கதவிக்கா வயது 7-

இவர்கள் இருவரும் ஜூன் 7-ம் தேதி காலை 10: 45 மணி அளவில், கரூர் - மதுரை பைபாஸ் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர்.

இவர்களது வாகனம், சுக்காலியூர், அன்னை மெஸ் அருகே சென்றபோது, எதிர் திசையில் திண்டுக்கல் மாவட்டம், திருச்சி சாலை, கே ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த மோனிஷ் என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், தேன்மொழி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் டூவீலருடன் கீழே விழுந்ததில் தேன்மொழி மற்றும் சிறுமி கதவிக்கா ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக இருவரையும் மீட்டு, கரூர் செந்தில்கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தேன்மொழி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய மோனிஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.

தொடர்புடைய செய்தி