அனுமதி இன்றி ரேயன் திரைப்பட பிளக்ஸ் பேனரை நிறுவிய தனுஷ் நிர்வாகிகள் மீது வழக்கு.
தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் தனுஷ் நடித்து வெளியாகி உள்ள
ரேயன் திரைப்படம் கரூரிலும் திரையிடப்பட்டுள்ளது.
இதற்காக தனுஷ் நற்பணி மன்ற கரூர் ஒன்றிய தலைவர் தினேஷ் மற்றும் ஆர்ஆர் டிசைன் பிரிண்டர்ஸ் ஆகியோர் இணைந்து தனுஷ் பட பிளக்ஸ் பேனரை தயாரித்து, கரூர் திண்ணப்ப தியேட்டரில் இருந்து கரூர் பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலையில் அனுமதி இன்றி நிறுவியுள்ளனர்.
கரூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஜூலை 26 ஆம் தேதி காலை 8 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மேற்கண்ட பிளக்ஸ் பேனர் நிறுவப்பட்டது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, தனுஷ் நற்பணி மன்ற நிர்வாகிகள் அனுமதி இன்றி நிறுவியது தெரிய வந்தது.
பொதுமக்களுக்கு இடையூறாகவும், அனுமதியின்றி பிளக்ஸ் பேனரை நிறுவிய தனுஷ் நற்பணி மன்ற கரூர் ஒன்றிய தலைவர் தினேஷ் மற்றும் இந்த பிளக்ஸ் பேனரை தயாரித்துக் கொடுத்த ஆர்ஆர் டிசைன் பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் நகர காவல் துறையினர்.