கரூரில் திடீர் மழை. பொதுமக்கள் மகிழ்ச்சி.

52பார்த்தது
கரூரில் திடீர் மழை. பொதுமக்கள் மகிழ்ச்சி.

கேரளா, கர்நாடக மற்றும் வட மாநிலங்களில் அதிகப்படியாக மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி வருகிறது.

இதேபோல், தமிழகத்திலும் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனிடையே பருவ சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் ஏற்கனவே அறிவிப்பு செய்திருந்தது.

இந்நிலையில், கரூரில் திடீரென கூடிய கரு மேகங்கள் மழையாக பொழிந்தது.

கடந்த சில நாட்களாகவே அதிகப்படியான காற்று மற்றும் வெயில் காரணமாக அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், தற்போது திடீரென கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி