பாரப்பட்டியில் பள்ளி செல்லும் பாதையை தடுத்ததால் பெற்றோருடன் ஆட்சியரிடம் முறையிட்ட மாணாக்கர்கள்.
கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா , பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அப்பகுதியில் பள்ளி செல்லும் மாணவர்கள் உடன் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட வந்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மகாலட்சுமி கூறும்போது , எங்கள் ஊரில் குறிப்பிட்ட நபர்கள் அரசுக்கு சொந்தமான பொது பாதையை தங்களுடைய பாதையை கூறி அந்த பாதையை பயன்படுத்த கூடாது என தகாத வார்த்தை பேசி தடுக்கின்றனர்.
மேலும் பள்ளி மாணவர்கள் அந்த பாதையை பயன்படுத்தி தான் பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளதால் அவர்களையும் நாய்களை அவிழ்த்து விட்டு கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார்கள்.
இதனால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவதற்கு அச்சமாக உள்ளது.
இதன் காரணமாக மாவட்ட ஆட்சியரை இன்று நேரில் சந்தித்து மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.
மேலும் , பள்ளி மாணவர்கள் மற்றும் ஊரில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் உடைய உயிருக்கு அச்சம் ஏற்படுத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை. விடுத்தனர்.