செம்மலர் நகரில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர் எதிர்பாராமல் கீழே விழுந்து உயிரிழப்பு.
கரூர் மாவட்டம் வெங்கமேடு அருகே உள்ள அருகம்பாளையம் செம்மலை நகர் பகுதியில் சேர்ந்தவர் மாயவன் வயது 55.
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு கை கால்கள் இயல்பாக செயல்படாமல் விரக்தியில் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் அவரது வீட்டில் நின்று கொண்டு இருந்தபோது,
எதிர்பாராமல் தன்னிச்சையாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த மாயவனின் மகள் லாவண்யா வயது 21 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த மாயவனின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்ககுக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.