கரூரில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சு போட்டி. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி அக்டோபர் 17 அன்று கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள கூடுதல் கட்டிடக் கூட்ட அரங்கில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9. 30 மணி முதல் 1. 00 மணி வரை நடத்தப்பெறும்.
இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5000/- இரண்டாம் பரிசு ரூ. 3000/- மூன்றாம் பரிசு ரூ. 2000/- மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்புப் பரிசு ரூ. 2000/- வழங்கப் பெற உள்ளது.
அண்ணா பிறந்தநாளையொட்டி 17. 10. 2023 அன்று பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பெறும் பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள
1. காஞ்சித் தலைவன் 2. அண்ணாவும், பெரியாரும்
3. தமிழும் அண்ணாவும்
4. எழுத்தாளராக அண்ணா
5. தென்னாட்டு பெர்னாட்ஷா - போன்ற தலைப்புகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.
பள்ளி மாணவ- மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம் ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.