கரூர்: புத்தாண்டு.. கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி வாழ்த்திய எஸ்பி

74பார்த்தது
கரூரில், புத்தாண்டை வரவேற்று கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி வாழ்த்து தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா.கரூர் மாவட்த்தில் நேற்று இரவு முழுவதும் 2025-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. நள்ளிரவு 12 மணி ஆனதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பொதுமக்கள் பொது இடங்களில் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்துத் தெரிவித்தனர்.

கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் மாவட்ட காவல் துறை சார்பில், புத்தாண்டை வரவேற்று, கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஃபெரோஸ் கான் அப்துல்லா கலந்துகொண்டு, கேக் வெட்டி மாணவர்கள், மாணவிகள், பொதுமக்களுக்கும், காவலர்களுக்கும் வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேமானந்தம், துணைக் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், இருபால் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு புத்தாண்டை கொண்டாடி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி