வேலாயுதம்பாளையம்- முதல் முறையாக ஸ்கை லிப்ட் மூலம் தீயணைப்பது குறித்த ஒத்திகை பயிற்சி - பொது மக்கள் வியப்பு.
கரூர் மாவட்டத்தில் தீயணைப்பு துறையில் புதிதாக பணிக்கு சேர்ந்த 98 பணியாளர்களுக்கு வேலாயுதம்பாளையம் அருகே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் திருப்பூர், தஞ்சை, விழுப்புரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்
தீயணைப்பு உடற்பயிற்சி, அணி பயிற்சி, மீட்பு பயிற்சி , நவீன உபகரணங்களை கையாளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இன்று
வேலாயுதம்பாளையத்தில் செயல்படும் தனியார் கல்லூரியில் தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.
திடீரென தீ விபத்து ஏற்பட்டால் உள்ளே சிக்கியவர்களை எப்படி மீட்பது? தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து ஒத்திகை தீயணைப்பு வீரர்களால் நடத்தப்பட்டது
சுமார் 170 அடி உயரம் உள்ள 'ஸ்கை லிப்ட்' மூலமாக உயரமான கட்டிடங்களில் தீ விபத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்பது போன்று தீயணைப்பு வீரர்கள் முதன்முதலாக செயல் விளக்கம் செய்து காண்பித்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
திருச்சி மண்டல துணை இயக்குனர் குமார் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் வடிவேல் , உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.