கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஸ்ரீ சீதா கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. கரூர் ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஐயப்ப சேவா சங்கத்தின் 38ஆம் ஆண்டு விழா ஸ்ரீ ஐயப்பன் கோவில் வளாகத்தில் டிசம்பர் 26ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது.
தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று 24ஆம் ஆண்டு சீதா கல்யாண உற்சவம் நிகழ்ச்சி, திருச்சிஸ்ரீஸ்ரீராம் பாகவதர் மன்ற குழுவினர் சார்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இறைவனை புகழ்ந்து பல்வேறு கீர்த்தனைகள் பாடப்பட்டு, மகா தீபாரனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு, ஸ்ரீராமனின் புகழைப் பாடி பரவசமடைந்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை 7 மணி அளவில் சீதா ராமர் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.