ஸ்ரீ ராமர் கோவில்-அட்சதை, அழைப்பிதலுக்கு சிறப்பு பூஜை.

75பார்த்தது
ஸ்ரீ ராமர் கோவில்-அட்சதை, அழைப்பிதலுக்கு சிறப்பு பூஜை.
ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம். அட்சதை, அழைப்பிதலுக்கு சிறப்பு பூஜை. அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் மகா கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை நாடே எதிர்பார்த்து உள்ளது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் அழைப்பிதழ் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்டத்தில் அழைப்பிதழை வழங்குவதற்கு முன்பாக அழைப்பிதழ் மற்றும் அட்சதயை கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ வெங்கட ரமண சுவாமி திருக்கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்யும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. பூஜை முடிந்தவுடன் பொதுமக்களுக்கு அழைப்பிதழ் மற்றும் அட்சதை வழங்கும் நிகழ்ச்சியை செந்தில்நாதன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட துணை தலைவர்கள் செல்வம், ஈஸ்வரி, மருத்துவப் பிரிவு மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த் கார்த்திக், மண்டல் தலைவர்கள் ரவி, வெங்கடாசலம், முருகேசன், பிறமொழி பிரிவு மாவட்ட தலைவர் குப்புராவ், விளையாட்டு பிரிவு சதீஷ், விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் இளங்கோவன், தெற்கு மாநகர பொதுச்செயலாளர் சாரங்கபாணி உள்ளிட்ட மாநில, மாவட்ட , மண்டல் பாஜக நிர்வாகிகள், ஆன்மீக பெரியோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி