கரூரில் இளைஞர் கொலையில் திடுக்கிடும் தகவல்

64பார்த்தது
கரூரில் இளைஞர் கொலையில் திடுக்கிடும் தகவல்
கரூரில் கடந்த 22 ஆம் தேதி காணாமல் போன இளைஞர் ஜீவா, சசிகுமார் உள்ளிட்ட கும்பலால் ஏழு துண்டுகளாக வெட்டி குழி தோண்டி புதைக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின் பேரில் 9 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்

இதில் ஜீவாவின் வீட்டின் அருகே வசிக்கும் சசிகுமார்(19) என்ற இளைஞர் அவரை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்தனர்.

போலீசார் விசாரணையில், கடந்த 2021-இல் வடக்கு காந்திகிராமம், பெரியார் நகரைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை அவரது நண்பரான பசுபதிபாளையத்தைச் சேர்ந்த தர்மா (எ) கிருஷ்ணமூர்த்தி மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்ததால் ஜீவாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

மேலும், சில நாட்களுக்கு முன்பு ஜீவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சசிகுமார் புகைப்படத்தைப் பதிவிட்டு அவரது தலை சிதைக்கப்படும் எனப் பதிவிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார், ஜீவாவை வழக்கமாக மது அருந்தும் இடமான கரூர் கட்டிடங்களுக்கு அருகே வரவழைத்து மது அருந்த வைத்துள்ளனர். பின்னர் போதையில் இருந்த ஜீவாவை, சசிகுமார் கொலை செய்து அவரது உடலை வெட்டி சாக்குமூட்டைக்குள் போட்டு, குழி தோண்டி புதைத்துள்ளர்
இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சசிகுமார், பாண்டியராஜன், மதன் கார்த்திக், சுதாகர், அருண்குமார், மதன்குமார் ஆகிய 6 பேரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை

தொடர்புடைய செய்தி