சாந்தப்பாடி-பூச்சிகொல்லியை மதுவில் கலந்துகுடித்து உயிரிழப்பு

59பார்த்தது
சாந்தப்பாடியில் சகோதரனுக்கு திருமணம் ஆகவில்லையே! விரக்தியில் மதுவில் விஷம் கலந்து குடித்தவர் உயிரிழப்பு.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சாந்தப்பாடி, சமங்கராயர் தோட்டத்தை சேர்ந்தவர் சக்திவேல் வயது 42.

அண்மைக்காலமாக இவர் மது போதைக்கு அடிமையாகி நாள்தோறும் மது அருந்தி வந்துள்ளார்.

இதனிடையே இவரது சகோதரருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் விரக்தி மனப்பான்மையோடு வாழ்ந்து வந்த சக்திவேல், மார்ச் 19ஆம் தேதி காலை 9 மணி அளவில் அவரது தோட்டத்தில் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இந்த சம்பவம் அறிந்த சக்திவேலின் சகோதரி புனிதவதி வயது 46 என்பவர், தனது தம்பியை மீட்டு அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த புனிதவதி சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சக்திவேலின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி