கரூரில் ரூ. 1. 69 கோடியில் புதிய நீச்சல் குளம் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.
கரூர் மாநகராட்சியின் மண்டலம் 2-ல்
2025 -26 ஆம் ஆண்டுக்கான கல்வி நிதி குழு மானியத்தில் ரூபாய் 1. 69 கோடி மதிப்பீட்டில், கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நீச்சல் குளம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அதற்கான பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் இளங்கோ , சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன் , ஆணையர் சுதா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனகராஜ் , கோல்ட் ஸ்பாட் ராஜா மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் , அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை சிறப்பித்தனர்.