செல்லாண்டிபாளையம் "மாநில நெடுஞ்சாலை ஆணையம்" கைவிட வேண்டும்.

54பார்த்தது
செல்லாண்டி பாளையத்தில், மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கரூர் அடுத்த செல்லாண்டி பாளையத்தில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் கணேசன், மாவட்ட துணை தலைவர் நல்லசிவம், மகேந்திரன், மாவட்ட இணை செயலாளர் செந்தில்குமார், ரமேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ராமசாமி, மாவட்ட செயலாளர் சிங்காராயர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயலாளர் குப்புசாமி, முன்னாள் மாநில துணை தலைவர் மகாவிஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி