கரூர்: "Get Out Modi" என்று சொல்லு பார்க்கலாம்.. அண்ணாமலை சவால்

67பார்த்தது
உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லு பார்க்கலாம். அண்ணாமலை சவால் விட்டு ஆவேச பேச்சு.

கரூர் 80 அடி சாலையில் நேற்று இரவு கரூர் மாவட்ட பாஜக சார்பில் நடைபெறும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது, தமிழகத்திற்கு மோடி வந்தால் முதலில் "Go Back Modi" என்று கூறினோம். இனிமேல் "Get Out Modi" என்று கூறுவோம் என உதயநிதி பேசியிருக்கிறார். நீ சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லு பார்க்கலாம். என்னுடைய தாத்தா, அப்பா முதல்வர் என்று சொல்லிக் கொண்டு உலக தலைவரை மதிக்காத கத்துக்குட்டி உதயநிதி.

உதயநிதிக்கு ஆதரவாக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி போலீஸாரால் தேடப்படும் நபரான அவர் சென்னை ஈசிஆர்-ல் இருக்கிறார்.

அன்பில் மகேஷ் காது கொடுத்து கேட்டுக்கோ சைக்கிளில் சென்று பேருந்தில் பயணித்து பள்ளி சென்றவன் நான் என்னிடம் பந்தா காட்ட வேண்டாம்.

மூன்றாவது மொழியாக பிடித்த மொழியை படிக்கலாம் என்று தான் மோடி சொல்கிறார். அவர் எப்போது இந்தியை திணித்தார். தமிழகம் வந்தால் ஆங்கிலத்தில் பேசும் அவர் நம்மிடம் ஏன் இந்தியை திணிக்க போகிறார் என ஆவேசமாக பேசினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி