காவல்துறை அனுமதியோடு கரூரில் நடைபெறும் மணல் கொள்ளை- MRV பேட்டி.
கரூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மணல் கொள்ளை காவல்துறை ஆசியோடு நடப்பதாக தெரிவித்தார்.
வாங்கல் பகுதியில் செக் போஸ்ட் உள்ள இடத்தில் காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வரும் லாரிகளை குறிப்பெடுத்து பண வசூலில் காவல்துறையினர் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதற்கெல்லாம் தீர்வு 2026ல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமையும் போது நடக்கும் என தெரிவித்தார்.