கோடையை சமாளிக்க காவலர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய எஸ். பி.

70பார்த்தது
கரூரில் கோடையை சமாளிக்க காவலர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய எஸ். பி.

கோடை காலம் தமிழகத்தில் துவங்கியது முதலே, கோடையின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது.


இன்னும் நாட்கள் செல்ல செல்ல கோடையின் தாக்கம் அதிகரிக்கும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் கொளுத்தும் கோடையிலும், சாலையில் நின்று பணியாற்றும்போது அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்காகவும், தற்காத்துக் கொள்வதற்காகவும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று கரூர் மனோகரா கார்னர் பகுதியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கரூர் காவல்துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லாவுக்கு பல்வேறு சமூக அமைப்பினர் வரவேற்று பொன்னாடை அணிவித்தனர்.

பின்னர் காவலர்களுக்கு கோடையின் தாக்கத்தை தற்காத்துக் கொள்ள கருப்பு நிற கண்ணாடியும், சோலார் தொப்பிகளும், முக கவசங்களும் வழங்கியதோடு அவர்களுக்கு நீர், மோர், எலுமிச்சை பழ ரசம், தர்பூசணி, ரோஸ் மில்க் உள்ளிட்ட பழரசங்களை கொடுத்து அவர்கள் கொளுத்தும் கோடையிலும் சிறப்பாக பணியாற்ற வாழ்த்து தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி