கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது.

51பார்த்தது
கரூரில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழ் மருதங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் வயது 43.


இவர் நேற்று முன்தினம் இரவு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் மார்க்கெட் அருகே டாஸ்மாக் மதுபான கடை அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய் குமார் வயது 24 என்பவர், மகாலிங்கத்திடம் சென்று கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 500 ரூபாய் பறித்து சென்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மகாலிங்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக சஞ்சய் குமாரை காவல்துறையினர் கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய் குமார் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி