கிறிஸ்துமஸ் நாள் அன்று காலை 8-முதல் பிற்பகல் 2 மணி வரை ரயில்வே முன்பதிவு அமைப்பு மையங்கள் செயல்படும்-PRO
வருகிற டிசம்பர் 25ஆம் தேதி இயேசு கிறிஸ்து பிறந்த நாளை முன்னிட்டு உலகெங்கும் கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாட உள்ளனர்.
கிறிஸ்துமஸ் திருநாளை கொண்டாடுவதற்கு ஏற்ப, அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
அன்றைய தினம் ஏராளமானோர் கிருத்துவ தேவாலயங்களுக்கு சென்று, வழிபாடு நடத்தி ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்துக் கொள்வர்.
இதனிடையே கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் கோட்டத்தில் உள்ள கணினி மயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு அமைப்பு மையங்கள் (பி ஆர் எஸ் மையங்கள்) கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமையில் செயல்படுவதைப் போல, காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒரே ஒரு ஷிப்ட் மட்டுமே செயல்படும் என தெரிவித்துள்ளார்.
எனவே, ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளுமாறும் சேலம் கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் கேட்டுக் கொண்டுள்ளார்.