சமய சமுதாய நல்லிணக்க மாநாடு-புறப்பட்டுச் சென்ற பாமகவினர்.

71பார்த்தது
கரூர், சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாட்டுக்கு புறப்பட்டுச் சென்ற பாமகவினர்.

கும்பகோணத்தில் இன்று மாலை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் சோழ மண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பங்கேற்க கரூர் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பி எம் கே பாஸ்கரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு சென்றனர்.


இந்த நிகழ்ச்சியில் கரூர் நகர செயலாளர் ராக்கி முருகேசன், மாவட்ட தலைவர் சோ. தமிழ்மணியன், கரூர் ஒன்றிய நிர்வாகிகள் விஸ்வநாதன், மனோகரன், கடவூர் ஒன்றிய நிர்வாகி பழனிச்சாமி, கரூர் நகர பொருளாளர் நிர்மலா, மாவட்ட துணை செயலாளர் மார்க்கெட் வரதராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் கண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் இந்த குழுவில் பங்கேற்று புறப்பட்டு சென்றனர்.


முன்னதாக வேன் முன்பு நின்று பாட்டாளி மக்கள் கட்சியையும், வன்னியர் சங்கத்தையும் வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி