கரூர்: ஒழுங்குமுறை விற்பனை கூடம்-ரூ41. 20க்கு வேளாண் பொருட்கள் ஏலம்

53பார்த்தது
சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.41,20,840-க்கு வேளாண் பொருட்கள் ஏலம் போனது. வேலாயுதம்பாளையம் சுற்றியுள்ள விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் தேங்காய், எள் போன்றவற்றை அருகே உள்ள சாலைப்புதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து வருகின்றனர். 

நேற்று அங்கு நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 5,115 கிலோ தேங்காய் விற்பனைக்கு வந்தது. இந்த தேங்காய்கள் 3,05,744 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் கொப்பரை தேங்காய் 11,716 கிலோ விற்பனைக்கு வந்தது. இந்த கொப்பரை தேங்காய் 24,86,349 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. இதேபோல் சிகப்பு எள் 13,747 கிலோ விற்பனைக்கு வந்தது. மொத்தம் சிகப்பு எள் 13,28,747 ரூபாய்க்கு விற்பனையானது. ஆக மொத்தம் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 41,20,840 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி