நோன்பு திறக்கும் நாளில் பங்கேற்று இஸ்லாமியருக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.
இஸ்லாமியர்களின் புனித விழாவான ரமலான் பண்டிகை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, கரூர்- கோவை சாலையில் உள்ள பள்ளிவாசலில் கரூர் மாவட்ட திமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக மின்சார மற்றும் ஆயத்த தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது திமுக கட்சி நிர்வாகிகள் இஸ்லாமியர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சிறுபான்மை இன பிரிவு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இஸ்லாமியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி இஸ்லாமியர்கள் அனைவருக்கும் புனித ரமலான் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.